Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்க மாட்டேன் : அஜித்

28 டிச, 2010 - 12:25 IST
எழுத்தின் அளவு:

அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்கவே மாட்டேன் என்று நடிகர் அஜித் அதிரடியாக கூறியுள்ளார். சமீப காலமாக சினிமா நட்சத்திரங்கள் அரசியல் கட்சிகளில் சேருவதும், அரசியலில் நுழைகிறார் என்பது போன்ற செய்திகளும் அதிகரித்து வருகிறது. நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அஜித்தும் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்துவதற்காக ரசிகர்கள் கூட்டவிருந்த கூட்டத்துக்கு கண்டனம் தெரிவித்த அஜித், இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டால் ரசிகர் மன்றத்தை கலைக்கவும் தயங்க மாட்டேன், என்றும் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் அரசியலுக்கு வருவது குறித்து அஜித் அளித்துள்ள பேட்டி ரசிகர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பேட்டியில், நீங்களும் அரசியலில் இறங்க மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கும் அஜித், எனக்கு இன்று அரசியல் ஆசை இல்லா விட்டாலும், ந‌ாளைக்கே சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்னை அரசியலுக்குள் கட்டாயமாக இழுத்து விட்டால், அரசியலையும், சினிமாவையும் ஒன்றோடு ஒன்று கலக்க மாட்டேன். சினிமாவில் நடிக்கவே மாட்டேன். காரணம், சினிமாவில் நடித்துக் கொண்டே கார் ரேஸிங்கில் கலந்து கொண்டதால் என்னால் அந்த இரண்டு துறைகளிலும் முழுக் கவனம் செலுத்த முடியவில்லை. இது என் சொந்த வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம். நீங்கள் சொல்கிற சூழ்நிலை வந்தால்... எனக்குப் பிடித்த கட்சியில் சேருவேன். என்னுடைய நற்பணி இயக்கங்களில் எல்லா கட்சியை சேர்ந்த ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் நான் ஒருபோதும் பிரிவினை ஏற்படுமாறு செயல்பட மாட்டேன். அவர்கள் விருப்பம் இருந்தால் மட்டுமே என்னோடு வரலாம். அடுத்தது நான் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டுமென்றால், நான் சேர்கிற கட்சியில் எனக்கென ஏதாவது ஒரு முக்கிய பதவியை கொடுக்க முன்வந்தால், அதை ஏற்றுக் கொள்ள மாட்‌டேன். எனக்கு முன்பே அந்த கட்சிக்காக இருபது வருடங்கள் உழைத்தவர்கள் மனதைப் புண்படுத்துகிற மாதிரியான முன்னுரிமை எனக்கு அளிக்கப்படுவதில் எனக்கு விருப்பமில்லை. எனக்கு ஏதாவது ஒரு பணி கொடுத்து, அதை நான் எப்படி செய்து முடித்து காட்டுகிறேன் என்பதைப் பொறுத்தே பதவியோ, உயர்வோ எனக்கு அளிக்கப்பட வேண்டுமென விரும்புகிறேன், என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (48) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (48)

சதீஷ் - salem,இந்தியா
28 ஜன, 2012 - 11:41 Report Abuse
 சதீஷ் வெரி குட் ஸ்பீச் தல வாழ்க !
Rate this:
ramraj - srivilliputher,இந்தியா
07 அக், 2011 - 11:12 Report Abuse
 ramraj தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல தல இஸ் குட்
Rate this:
vijay - salem,இந்தியா
14 செப், 2011 - 15:52 Report Abuse
 vijay Thala thala thaa......
Rate this:
நரேஷ் - Bangala,இந்தியா
14 செப், 2011 - 15:14 Report Abuse
 நரேஷ் சூப்பர் தல, your speech was very good and also your decision.
Rate this:
ராம்.ரா - vdm,இந்தியா
02 செப், 2011 - 06:21 Report Abuse
 ராம்.ரா தல வேண்டாம் நமக்கு அந்த சாக்கடை... நீ நடி நாங்க பாக்றோம் படத்த ஹிட் பன்றோம்...
Rate this:
மேலும் 43 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in