ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
இந்த செய்தி நிச்சயம் பாலைய்யா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் தரும். ஆம் பாலைய்யாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான லயன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் உள்ளது. அதாவது இந்த படம் வரும் மே 1ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று முதலில் கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் உள்ளது. இந்த படம் வரும் மே 7ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. என்ன காரணத்திற்காக லயன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது என்பது பற்றி தெளிவான தகவல் எதுவும் இல்லை.எனினும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து எந்தவொரு அதிகாரபூர்வ செய்தியும் வெளியாகவில்லை. ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எடுக்கப்பட்டு இருக்கும் ஒரு பொழுதுபோக்கு படம் லயன் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. மேலும் பாலைய்யா தனது ரசிகர்களை மனதில் வைத்தே இந்த படத்தில் கமிட் ஆனதால் இந்த படமானது ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும். இந்த படத்தில் அவருக்கு பிரபல நடிகைகளான திரிஷா மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் ஜோடியாகும். அறிமுக இயக்குனரான சத்யதேவ் இயக்கம் இந்த படத்திற்கு பிரபல இசை அமைப்பாளரான மணி ஷர்மா இசை அமைத்துள்ளார். பிரபல தயாரிப்பாளரான ருத்ரபதி ரமணா ராவ் மிகுந்த பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்துள்ளார்.