'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இளையராஜா பாடல்களை பயன்படுத்திய வகையில் ஆடியோ நிறுவனங்கள் மூலம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு 10 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தெரிவித்தார். சென்னையில் நேற்று நடந்த ஒரு விழாவில் இதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: தயாரிப்பாளர் சங்கம் நல்ல நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. இளையராஜா சாரின் பாடல்கள் ரைட்ஸ் தொகையாக 10 கோடி ரூபாய் வந்துள்ளது. இன்னும் 100 கோடி வசூலிக்க திட்டமிட்டிருக்கிறோம். தொலைக்காட்சி சேனல்கள் மாதத்திற்கு இரண்டு படங்கள் வீதம் ஆண்டுக்கு 24 சிறிய படங்களாவது வாங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகிறோம். இதுவும் நடைமுறைக்கு வரும். இனி சிறு பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் கலங்கத் தேவையில்லை என்றார்.