‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மிகவும் எதிர்பார்க்கப்படும் நந்தமூரி பாலகிரிஷ்ணாவின் லயன் படத்தின் ரிலீசுக்காக அவரது ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள். மேலும் தற்போது சம்மர் சீசன் வேறு. அதனால் லயன் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இந்த சம்மரில் லயன் ரிலீஸ் ஆகும் வேளையில் வேறு மூன்று படங்களும் ரிலீசாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது லயன் படத்திற்கு போட்டியாக என்று ஒரு போதும் சொல்லிவிட முடியாது. எனினும் ஒரே நேரத்தில் நான்கு படங்களும் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது. வரும் மே 1ம் தேதி லயன், வேர் இஸ் வித்யா பாலன்? , தாகுடுமூத தண்டாகொர் மற்றும் தோன்காட்ட ஆகிய நான்கு படங்களும் ரிலீசாக உள்ளது. வேர் இஸ் வித்யா பாலன்? படம் முழுநீள காமெடி படமாகும். தாகுடுமூத தண்டாகொர் படமானது தமிழ் படமான சைவத்தின் தெலுங்கு டப்பிங் படமாகும். ஆக லயனோடு மோதும் படங்களும் சளைத்தது அல்ல என்றே நினைக்கத் தோன்றுகிறது. இந்நிலையில் லயன் படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில் வரும் மே 1ம் தேதி லயன் ரிலீஸ் ஆவதில் சிக்கல் இருப்பதாகவே தெரிகிறது .