ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
மறைந்த நடிகர் பால் வாக்கர் நடிப்பில் உருவாகி பலத்த எதிர்பார்ப்புடன் வெளிவந்த ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸ் 7 ஆங்கிலபடம் வசூலில் பல சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. இப்படம் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இப்படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே 50 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படம் வெளியான முதல் 17 நாட்களில் உலகம் முழுக்க 1 பில்லியன் டாலர்களை (சுமார் 6250 கோடி ரூபாய்) வசூலித்து புதிய சாதனை படைத்திருக்கிறது.
இதற்கு முன்பு அவதார் திரைப்படம் 19 நாட்களில் 1 பில்லியன் டாலர்களை எட்டியதே சாதனையாக இருந்து வந்தது.
அதை இப்போது ஃபாஸ்ட் அன்ட் ஃபியூரியஸின் இந்த 7ஆம் பாகம் முறியடித்திருக்கிறது.