‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய்யை வைத்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் நாளைய தீர்ப்பு, ரசிகன், விஷ்ணு போன்ற படங்களை இயக்கித்தான் அவரை ஒரு நடிகராக நிறுத்தினார். அதன்பிறகு விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக படம் விஜயை வெற்றி ஹீரோவாக்கியது. அந்த வரிசையில், டைரக்டர் கே.பாக்யராஜூம் தனது மகன் சாந்தனுவை பெரிய நடிகராக்கும் முயற்சியாக சித்து ப்ளஸ்-2 படத்தை இயக்கினார் ஆனால் அது தோல்வி கண்டது. அதனால் அடுத்தபடியாக மகனை வைத்து படமெடுத்து அவர் ரிஸ்க் எடுக்கவில்லை. இந்த நிலையில், பாண்டியராஜனும் தனது மகன் பிருத்வியை நாயகனாக வைத்து 1985ல் தான் நாயகனாக நடித்த ஆண்பாவம் படத்தை தற்போது ரீமேக் செய்கிறார். அந்த படத்தில் பாண்டியன், ரேவதி, சீதா ஆகியோர் நடித்தது போன்று இப்போதும் 2 ஹீரோ, 2 ஹீரோயினி நடிக்கிறார்களாம். ஆனால் தற்போதைக்கு ப்ருதிவி மட்டுமே நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற நடிகர் நடிகைகளை இன்னும் முடிவு செய்யவில்லையாம். இப்படத்தை வஜ்ரம் படத்தை தயாரித்த ஸ்ரீசாய்ராம் பிலிம் பேக்டரி தயாரிக்க, விரைவில் கேரளாவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாம்.