நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் |
தெலுங்கு தொலைகாட்சியில் தொகுப்பாளராக வலம் வரும் சுனிதா, டோலிவுட்டின் முன்னணி நடிகைகளுக்கு பின்னணியும் பேசியுள்ளார். அதுமட்டுமல்லாது பாடகியாகவும் தனது திறமையை வெளிப்படுத்திய சுனிதா தற்போது நடிகையாக தனது திரைப்பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது. நடிகை நயன்தாரா தெலுங்கில் நடித்த அனாமிகா படத்தில் ஒரு பாடலைப் பாடி நடித்த சுனிதா தற்போது முழு நேர நடிகையாக நடிக்கவுள்ளராம். தெலுங்கு திரையின் இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் சுனிதா நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது. தனது குரலால் மட்டுமல்லாது தனது அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்த சுனிதா இதற்கு முன் வந்த பட வாய்ப்புகளை தவிர்ந்து வந்தார். தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு மகேஷ் பாபு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.