‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டில் வெளியான படம் - ஈ. இந்தப் படத்தில் ஜீவா - நயன்தாரா ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருமே வளர்ந்து வரும் கதாநாயகன், கதாநாயகியாக இருந்தனர். அதன் பிறகு நயன்தாரா உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார். ஜீவா அந்தளவுக்கு முன்னணி கதாநாயகனாக வளரவில்லை.
ஆர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா கதாநாயகியாக நடித்த 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்துள்ளார் ஜீவா. தனக்கு புதுப்படம் கமிட்டாகும்போதெல்லாம் நயன்தாராவை தனக்கு ஜோடியாக கமிட் பண்ணும்படி சொல்வார் ஜீவா. அவருக்கு சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகாது என்று தயாரிப்பாளர்கள் தயங்கினர். இந்நிலையில் தன் மானேஜர் செந்தில் பெயரில் ஜீவாவே ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஈ' படத்திற்குப் பிறகு ஜீவாவும், நயன்தாராவும் இணைந்து மீண்டும் நடிக்கிறார்கள். 'அம்பாசமுத்திரம் அம்பானி' படத்தை இயக்கிய பி.எஸ்.ராம்நாத் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு 'திருநாள்' என்று பெயரிடப்பட்டுள்ளது.