அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு |
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி படங்களில் வெற்றிக்கு பிறகு நந்திதாவின் கோலிவுட் மார்க்கெட் உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர் நடித்த நளனும் நந்தினியும், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி ஆகிய படங்கள் ஓடவில்லை என்றாலும், நந்திதாவின் பர்பாமென்ஸ் அவருக்கு கைகொடுத்தது. அதனால்தான் அதற்கடுத்து அஞ்சல, உப்புக்கருவாடு, இடம்பொருள் ஏவல் ஆகிய படங்கள் அவருக்கு கிடைத்தன. இந்த படங்களில் டம்மியான ஹீரோயினாக இல்லாமல் வெயிட்டான கதாபாத்திரங்களில் அவர் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில், அடுத்தபடியாக மேல்தட்டு ஹீரோக்களுடனும் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை அவ்வப்போது வெளிப்படுத்தி வந்த நந்திதா,தற்போது விஜய் நடிக்கும் புலி படத்தில் திடீரென்று கமிட்டாகி நடித்துள்ளார். அதே படத்தில் ஏற்கனவே ஸ்ருதிஹாசன், ஹன்சிகா என்ற இரண்டு முன்னணி நாயகிகள் இருக்க இவரும் இன்னொரு ஹீரோயினியாக நடிப்பதாக செய்திகள் பரவின. ஆனால், இப்போது விசாரித்தால் அந்த படத்தில் வெறும் 3 நாட்கள் மட்டுமே நடித்துள்ள நந்திதா, ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பதாக சொல்கிறார்கள். ஒருவேளை அந்த படத்தில் குள்ள மனிதராக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாககூட இருக்கலாம் என்றும் ஒரு தகவல் கசிந்துள்ளது.