இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
நடிகர் விஜய் மற்றும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த ஜில்லா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. நடிகர் விஜய் போலீஸாக, இப்படத்தில் நடிகை காஜல் அகர்வாலும் அவருக்கு ஜோடியாக போலீஸாக நடித்திருந்தார்.
இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதாக கூறப்பட்டது. மோகன்லால் கதாபாத்திரத்தில் வெங்கடேஷும், விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா அல்லது ராணா நடிக்கலாம் என்று கூறப்பட்டது. அதுமட்டுமல்லாமல் பலகிருஷ்ணாவிற்கு இப்படம் மிகவும் பிடித்திருப்பத்கவும் இப்படத்தில் அவருடன் விஜய் வேடத்தில் நடிகர் கல்யான் ராம் நடிக்கலாம் என்றும் பல்வேறு செய்திகள் கூறப்பட்டன.
ஆனால் தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படப்போவதில்லை என இப்படத்தின் தெலுங்கு உரிமையைப் பெற்றிருக்கும் ஸ்ரீ ஒபுலேஸ்வர புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளார். இப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு திரையிடப்படும் எனவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் இமான் இசையமைத்திருக்கும் ஜில்லா படத்தின் தெலுங்கு தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.