ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
இளையராஜாவின் தம்பி மகன்களான இயக்குநர் வெங்கட் பிரபுவும், காமெடி நடிகர் பிரேம்ஜியும் ஜாலி பார்ட்டிகள். அது மட்டுமல்ல இருவரும் அண்ணன் தம்பியைப்போல் பழகாமல் நண்பர்களைப்போல் பழகுவார்கள். இருவரும் ஒன்றாகவே பார்ட்டிகளுக்குச் செல்வார்கள். அந்தளவுக்கு ஜாலி பார்ட்டிகளான வெங்கட் பிரபுவும், பிரேம்ஜியும் தினமும் ஏதாவது பார்ட்டியில் கண்டிப்பாக இருப்பார்கள்.
இப்படிப்பட்ட வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. ஒழுக்கத்துக்கு பேர் போன சிவகுமாரின் பிள்ளையான சூர்யாவுக்கு சிகரட் பிடிப்பது தண்ணியடிப்பது போன்ற பழக்கங்கள் கிடையாது. மாஸ் படப்பிடிப்பின்போது வெங்கட் பிரபு, பிரேம்ஜி இருவரையும் கவனித்த சூர்யா தண்ணி அடிப்பதை நிறுத்தும்படி அட்வைஸ் செய்திருக்கிறார். அதோடு, உடம்பை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதின் அவசியம் பற்றியும் லெக்சர் அடித்திருக்கிறார். இதை பிரேம்ஜியே பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கிறார்.