போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
மியூசிக் சேனல் தொகுப்பாளினியாக வலம் வருகிறவர் தியா மேனன். இவர் தொகுத்து வழங்கும் லவ் டுடே நிகழ்ச்சி மியூசிக் ஏரியாவில் பாப்புலர். தற்போது தியா மேனன் நடிப்பு பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். மகான் கணக்கு என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இதில் ரமணா ஹீரோவாகவும், ரிச்சா சின்ஹா ஹீரோயினாகவும் நடிக்கிறார்ள். சம்பத் ஆறுமுகம் இயக்குகிறார். தியா இரண்டாவது நாயகியாக நடிக்கிறார்.
கேரளாவைச் சேர்ந்த தியா படித்தது கோவையில். மீடியா மீது ஆசை வந்து மாடலிங் ஷோ, விளம்பர படங்கள் என்று பயணித்து சின்னத்திரை தொகுப்பாளினி ஆனார். தற்போது சினிமா நடிகையாகவும் ஆகிவிட்டார். நண்பர்கள் இயக்கும் குறும்படங்களிலும் தீவிரமாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் தியாவின் கனவு.