ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
சில தினங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி, தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'என்னும் எப்பொழும்' படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியாருக்கு இடையேயான ஆத்மார்த்தமான நட்பு மிக அழகாக காட்டப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 16 வருடங்கள் கழித்து மீண்டும் இவர்கள் இணைந்து நடித்துள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த வரவேற்பினாலோ என்னவோ மோகன்லால் தற்போது நடித்துவரும் 'லோஹம்' படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார் மஞ்சு வாரியர்.
ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடித்துவரும் இந்தப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஆண்ட்ரியா நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக மைதிலி நடிக்கிறார். ஏற்கனவே மஞ்சு வாரியர்-திலீப் விவாகரத்தின் பின்னணியில் மோகன்லால் இருப்பதாக, தேவையில்லாமல் சொல்லப்பட்டு வந்த நிலையில் அவர்கள் 'என்னும் எப்பொழுதும்' படத்தில் நடித்தபோதே சிலர் முணுமுணுக்க ஆரம்பித்தனர். இப்போது இன்னொரு படத்திலும் இவர்கள் இணைந்து நடிப்பது வெறும் வாயை மெல்வதற்கு அவல் கொடுத்தது போல ஆகிவிடாதா என்கிறார்கள் இருவரின் நலம் விரும்பிகளும்.