‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தெலுங்கு திரையின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி வந்த லயன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தெலுங்கு திரையின் முன்னணி நடிகையான த்ரிஷா மற்றும் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே ஆகியோர் லயன் படத்தில் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 10ம் தேதி நடைபெற இருக்கின்றது. அதோடு இப்படம் கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக மே 1ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கின்றது. இந்நிலையில் நடிகர் பாலகிருஷ்ணாவின் 99வது படத்தை பற்றிய தகவல் வந்துள்ளது. டிக்டேட்டர் என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் ஸ்ரீநிவாஸ் இயக்க உள்ளதாக தெரிகின்றது. இதனை இயக்குநர் ஸ்ரீநிவாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
ஈராஸ் இன்டர்நேஷ்னல் தயாரிக்க இருக்கின்றது. இப்படத்தில் நடிகை நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தெலுங்கு திரையில் வெற்றி ஜோடிகளாக வலம் வரும் நடிகர் பாலகிருஷ்ணா மற்றும் நடிகை நயன்தாரா ஜோடி மூன்றாவது முறையாக இணையவுள்ளது. வரும் மே மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.