ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தெலுங்கு, தமிழ் மொழியில் தயாராகி வரும் படம் ருத்ரமாதேவி. தமிழில் முரளி ராமநாராயணன் தயாரிக்கிறார். அல்லு அர்ஜுன், ராணா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன். சுமன், கேத்ரின் தெரசா நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார்.
இதன் பின்னணி இசை கோர்ப்புக்காக இளையராஜா நாளை (மார்ச் 31) லண்டன் செல்கிறார். படத்தில் நடித்திருக்கும் அனுஷ்காவிற்கு இது முக்கியமான படம். அவரை நம்பியே 100 கோடி ரூபாய் முதலீட்டில் இந்தப் படம் உருவாகி வருகிறது. குணசேகரன் இயக்குகிறார். அனுஷ்கா, இளையராஜாவின் தீவிர ரசிகை. அண்மையில் ருத்ரமாதேவி டிரைலருக்கு இளையராஜா அமைத்திருக்கும் இசை பார்த்து மிரண்டு போய்விட்டார்.
இதனால் இளைராஜாவை வாழ்த்தவும், அவரிடம் வாழ்த்து பெறவும், லண்டனுக்கு வழியனுப்பி வைக்கவும் விரும்பிய அனுஷ்கா இதற்காக சென்னை வந்தார். பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜாவை சந்தித்து அவருக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்தினார். அவரிடம் வாழ்த்து பெற்றார்.
ருத்ரமாதேவி படத்தை பார்த்துவிட்ட இளையராஜா அதில் அனுஷ்காவின் நடிப்பை வியந்து பாராட்டினார். "ருத்ரமாதேவி படம் உங்களுக்கு பெரிய இடத்தை தரும்" என்று இளையராஜா கூறினார். பின்னர் அனுஷ்கா இளையராஜாவிடம் விடைபெற்றுச் சென்றார். இந்த சந்திப்பின் போது தயாரிப்பாளர் முரளி ராமநாராயணன், இயக்குனர் குணசேகரன் உடன் இருந்தனர்.