தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
நடிகை சுஜா வாருணி அக்மார்க் தமிழ் பொண்ணு. பிளஸ் 2 என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தவருக்கு அதன் பிறகு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் சுஜா என்கிற தன் பெயருடன் வாருணி என்கிற பெயரை சேர்த்துக் கொண்டு ஒரு பாடலுக்கு ஆடத் தொடங்கினார். குத்ததாட்ட நடிகை என்கிற முத்திரை விழுந்து விடும் என்பதற்காக இனி ஒரு பாட்டுக்கு ஆடுவதில்லை என்று முடிவு செய்தார்.
இதனால் ஹீரோயினாகத்தான் நடிப்பது என்கிற பாலிசி எதுவும் இல்லாமல் நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக வளர முடிவெடுத்தார். இந்த முடிவு அவருக்கு நல்ல பலனை கொடுத்திருக்கிறது. அக்கா, அண்ணி, வில்லி கேரக்டர்கள் நிறைய கிடைத்திருக்கிறது. வா டீல் படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கிறார். பென்சில் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாரின் டீச்சராக நடிக்கிறார். அமளி துமளியில் காமெடியாக நடிக்கிறார். வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நான்கு ஹீரோயின்களில் ஒருவராக கிளாமர் கேரக்டரில் நடிக்கிறார். சதுரன் என்ற படத்தில் ஹீரோயினாகவும் நடிக்கிறார். தொடர்ந்து கேரக்டர் ரோல்களில் நடிக்க வாய்ப்புகள் குவிகிறது. "எனக்கு பொருத்தமான, என்னால் நடிக்க முடிகிற எல்லா கேரக்டரிலும் கண்டிப்பாக நடிப்பேன்" என்கிறார் சுஜா வாருணி.