ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
'வணக்கம் சென்னை' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி அதன் பின் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பே அவர் விரைவில் ஒரு படத்தை இயக்க ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது சிம்பு நாயகனாக நடிக்க அனிருத் இசையமைக்க, கிருத்திகா இயக்க உருவாகப் போகும் ஒரு படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
'வணக்கம் சென்னை' படத்திற்கே அனிருத் தான் இசையமைத்திருந்தார். பெரிய அளவில் அந்தப் படம் வெற்றி பெறவில்லையென்றாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து. ஒரு கலகலப்பான காதல் படமாக அந்தப் படத்தை இயக்கியிருந்தார் கிருத்திகா.
சிம்பு நடித்து தற்போது “இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா” ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன. 'வாலு' படம் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் செல்வராகவன் இயக்கும் படம் ஒன்றில் சிம்பு நடிக்கப் போகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் கிருத்திகா, சிம்பு, அனிருத் இணையும் புதிய படம் ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது.