ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
நேரம் படத்தை இயக்கி தமிழில் ஒரு எதிர்பார்ப்புக்குரிய இயக்குனராக மாறியவர் அல்போன்ஸ் புத்தரன். நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா என மூவருக்கும் சினிமாவில் அடித்தளம் அமைத்துகொடுத்தவர் இவர் தான். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியல் இவருக்கு ஒருபக்கம் சந்தோஷத்தை கொடுத்தாலும் இன்னொரு பக்கம் அவரை அப்செட் ஆக்கவும் செய்திருக்கிறது.
இவர் சந்தோஷப்பட்டது அவரது நண்பன் நிவின் பாலி நடித்த '1983' படத்தின் இசையமைப்பாளர் கோபிசுந்தருக்கு சிறந்த பின்னணி இசைக்காக விருது கிடைத்ததற்காகவும் தான்.
ஆனால் அப்செட் ஆனதோ முன்னறியிப்பு' என்கிற படத்தில் நடித்ததற்காக மம்முட்டிக்கு சிறந்த நடிகர் என்கிற விருது கிடைக்காமல் மயிரிழையில் நுழுவிப்போனத்தை நினைத்துத்தான். “அருமையான நடிப்பை அந்தப்படத்தில் வெளிப்படுத்தியிருந்தார் மம்முட்டி.. விருது கமிட்டியினர் மம்முட்டி படத்தை மறு பரிசீலனை பண்ணியிருக்கலாம்” என கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்தரன்.