போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
'வேலையில்லா பட்டதாரி' படத்திற்குப் பிறகு வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. முதல் நாள் படப்பிடிப்பில் தனுஷ், எமி ஜாக்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். தனுஷ் இந்தப் படத்தில் நடிப்பதற்காக தன்னுடைய மீசையை முழுவதுமாக எடுத்து விட்டு மிகவும் சின்னப் பையன் போலக் காட்சித் தருகிறார்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த போது கொஞ்சம் நீளமான முறுக்கு மீசை வைத்திருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து சில நாட்களுக்கு முன் மீசையை எடுத்துவிட்டார். மீசை இல்லாததால் பார்ப்பதற்கு 'துள்ளுவதோ இளமை' தனுஷ் போல மிகவும் இளமையாக காட்சி தருகிறார்.
'வேலையில்லா பட்டதாரி' படம் போலவே இந்தப் படத்தையும் கலகலப்பாகவும், குடும்பத்துடன் பார்க்கும்படியாகவும்தான் எடுக்க உள்ளார்களாம். தனுஷுடன் முதல் முறையாக எமி ஜாக்சன், சமந்தா ஆகியோர் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளனர். இந்தப் படத்திற்காக அனிருத் ஏற்கெனவே சில பாடல்களை இசையமைத்துக் கொடுத்துவிட்டார்.
இப்படம் தீபாவளிக்கு வெளி வரும் விதத்தில் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.