‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ரஜினிகாந்தின் உறவினரான அனிருத், தொடர்ந்து பல ஹிட் படங்களில் பணி புரிந்து தற்போது தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இடம் பெற்று விட்டார்.
கடந்த ஆண்டில் விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த 'கத்தி' படத்திற்கு இசையமைத்தார். முதல் முறையாக ஒரு மிகப் பெரிய ஹீரோவுக்கு அனிருத் இசையமைத்தது அதுதான் முதல் முறை. அடுத்து மற்றொரு மிகப் பெரிய ஹீரோவான அஜித் நடிக்கும் படத்திற்கு தற்போது அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளார்.
'வீரம்' படத்திற்குப் பிறகு இயக்குனர் சிவா, அஜித்தை வைத்து இயக்க உள்ள புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதை அவரே ஒரு வீடியோ செய்தியாக நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார். அதில், “அஜித் சார் நடிப்பில் ரத்தினம் சார் தயாரிப்பில் சிவா சார் இயக்கத்தில் உருவாக உள்ள தல 56வது படத்தில் இசையமைக்கப் போவது, மிகவும் மகிழ்ச்சியாகவும் மிகவும் பெருமையாகவும் உள்ளது. மீண்டும் ஒரு நல்ல வருடத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி,” என அதில் அனிருத் தெரிவித்துள்ளார்.
ஒரு பக்கம் அனிருத்தை தனுஷும், சிவகார்த்திகேயனும் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது மற்ற ஹீரோக்களும் அனிருத்தை அவர்களது படங்களில் இசையமைக்க ஒப்பந்தம் செய்து வருகிறார்கள். அனிருத், தெலுங்கிலும், ஹிந்தியிலும் கூட இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.