ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
'இரண்டாம் உலகம்' படத்தின் படு தோல்வி காரணமாக தமிழ்த்திரையுலகில் இருந்து காணாமலே போய்விட்டார் இயக்குநர் செல்வராகவன். அவரை வைத்து படம் எடுக்க யாரும் முன் வரவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, அவர் டைரக்ஷனில் நடிக்கவும் ஹீரோக்கள் தயாராக இல்லை.
மனதை தேற்றிக் கொண்டு, அடுத்து நல்ல படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பக்கா ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி செய்து வந்தார். தனுஷ் சிபாரிசில் சிம்புவிடம் கதை சொன்னார். முதலில் பிகு பண்ணிய சிம்பு பிறகு நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஏப்ரல்) சென்னையில் துவங்கவிருக்கிறது. தற்போது இப்படத்திற்கான இதர நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வில் மும்முரமாக இருக்கிறாராம் செல்வராகவன்! இப்படத்தில் சிம்புவுடன் கெஸ்ட் ரோல் ஒன்றில் தனுஷும் நடிக்கிறாராம்! இந்தப் படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் சம்மந்தப்பட்ட காட்சிகள் நிறைய இருக்கிறதாம். எனவே அது குறித்து கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நிபுணர்களிடம் டிஸ்கஷ் பண்ணி வருகிறார் செல்வராகவன்.
இன்னொரு இரண்டாம் உலகமா?