குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? |
மாஸ் ஹிரோவான ரவி தேஜா தற்போது கிக் 2 படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை தொடர்ந்து அவரின் அடுத்த பட வேலைகளும் ஆரம்பமாகிவிட்டதாம், தமிழில் விஜய் - மோகன் லால் நடிப்பில் வெளிவந்த ஜில்லா படத்தின் ரீமேக்கில்தான் அடுத்து ரவி தேஜா நடிக்கப்போகிறாராம். விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது, அதுமட்டுமின்றி இப்படத்தில் மோகன் லால் கதாபாத்திரத்தில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை இயக்கப்போவது ”தீசுகெல்தா” படத்தை இயக்கிய இயக்குநர் வீரு போட்லா தான். சமீபத்தில்தான் வெங்கடேஷ் மற்றும் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடித்து திரைக்கு வந்த “கோபாலா கோபாலா” திரைப்படம் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது, இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு மாஸ் ஹிரோவுடன் இணைந்து நடிக்கவிருப்பதால் வெங்கடேஷ் மகிழ்ச்சியுடன் இருக்கிறாராம்.