ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கிய குணசேகர் 'ருத்ரமாதேவி' படத்தை மிகப் பிரம்மாண்டமான முறையில் இயக்கி வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர்(தெலுங்கு) நேற்று மாலை வெளியிடப்பட்டது. சுமார் இரண்டு நிமிடங்கள் உள்ள இந்த டிரைலர் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. ஒரு மாபெரும் சரித்திர கால 13ம் நூற்றாண்டுப் படமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. அனுஷ்கா, அல்லு அர்ஜுன், பிரகாஷ்ராஜ், கேத்தரின் தெரேசா, நித்யா மேனன் மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தின் டிரைலர் நேற்று மாலை யு டியுபில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த டிரைலரைப் பார்த்துள்ளனர். இளையராஜாவின் பின்னணி இசையில் டிரைலர் மிகவும் மிரட்டலாக அமைந்துள்ளது. இன்றைய தமிழ்த் திரையுலகினரை விட, தெலுங்கு, மலையாளத் திரையுலகினர் இளையராஜா மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையே 'ருத்ரமாதேவி' படம் காட்டுகிறது.
இது பற்றி படத்தின் இயக்குனர் குணசேகர் கூறுகையில், “மியூசிக் மாஸ்டர் இளையராஜா சார் கதை கேட்டு, ரொம்ப இன்ஸ்பியர் ஆகினாரு. இந்த மாதிரி படத்தை அடிக்கடி யாரும் எடுக்க முடியாது. நல்லா எடுங்க, உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க குணா, நான் தர்றேன்னு சொன்னாரு. பாடல் பதிவிற்கே ஹங்கேரியில இருந்து இசைக் கலைஞர்களை வரவைச்சி பண்ணிக் கொடுத்தாரு. பாடல்கள் எல்லாம் அருமையா வந்திருக்கு. சரித்திரப் படம்கறதால இளையராஜா சார் இந்தப் படத்தை ரொம்ப பெருமையோட இசையமைக்கணும்னு எனக்கும் பல ஆலோசனைகள் கொடுத்தாரு. பின்னணி இசையையும் லண்டன் இசைக் கலைஞர்களை வச்சி பண்ணிக்கிட்டிருக்கோம்,” என்றார் குணசேகர்.