போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும், ஆட்டநாயகன் என சில படங்களில் நடித்தவர் ஷக்தி. ஆனால் அவர் நடித்த படங்கள் வெற்றி பெறாததால் தொடர்ந்து மந்தமான நிலையிலேயே இருந்து வரும் ஷக்தி, கதயாலிது ஜீவிதம் என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் அவர் நடிக்கும் முதல் படம் இது. ஒருவேளை இந்த படம் ஒர்க்அவுட்டாகி விட்டால் அடுத்தபடியாக மலையாளத்தில் அதிக கவனம் செலுத்தும் ஐடியாவும் வைத்திருக்கும் ஷக்தி, தற்போது தமிழில் படம பேசும் என்ற படத்தை அடுத்து தற்காப்பு என்றொரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஒருவன் தன்னைத்தானே தற்காத்துக்கொள்வது எப்படி என்பதை அடிப்படையாகக்கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் முதன்முதலாக ஆக்சன் ஹீரோவாக நடிக்கிறாராம் ஷக்தி. இதற்கு முன்பு அவர் காதல் கதைகளில் மட்டுமே நடித்திருக்கும் நிலையில், இந்த படம் தனது கேரியரில் வித்தியாசமான படமாக இருக்கும் என்று கருதும் ஷக்தி, தற்போது தற்காப்பு படத்துக்காக பெங்களூரில் முகாமிட்டு நடித்துக்கொண்டிருக்கிறார்.