போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கிறது காக்கி சட்டை. எதிர்நீச்சல் படத்தின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியிருக்கும் காக்கி சட்டை படத்தின் முன்னோட்டம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. யு டியூப்பில் 25 லட்சம் பேர் இந்த முன்னோட்டத்தை கண்டு ரசித்தனர். இந்த முன்னோட்டத்தைப் பார்த்த அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குத்தனர். விஜய் ரசிகர்களோ சிவகார்த்திகேயனை திட்டித்தீர்த்தனர். காரணம்... காக்கி சட்டை முன்னோட்டத்தில் தல ஸ்டைல்ல சொல்லணும்னா.... இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங் என வசனம் பேசியிருப்பார் நடிகர் சிவகார்த்திகேயன். இதனால் சிவகார்த்திகேயன் அஜித்தின் தீவிர ரசிகர் என்றொரு பேச்சு சமூக வலைதளங்களில் நிலவியது.
தன் மீது அஜித் ரசிகர் என்ற முத்திரை குத்தப்படுவதை விரும்பாத சிவகார்த்திகேயன் இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் தெளிவுபடுத்தி உள்ளார். கட்அவுட், பாலாபிஷேகம் எல்லாம் பண்ற அளவுக்கு நான் யாரோட மிகப்பெரிய ரசிகன், வெறியன் அப்படின்னு சொல்லணும்னா அது ரஜினி சாரைத்தான் சொல்லுவேன். அதுக்கப்புறம் எனக்கு அஜித் சார், விஜய் சார் ரெண்டு பேரையுமே ரொம்பவும் பிடிக்கும். எந்தவிதமான பேக்ரவுண்ட்டும் இல்லாம தன்னம்பிக்கையோட அஜித் சார் ஜெயிச்சார்னா, ஒரு வாய்ப்புக் கிடைச்சா அதை எப்படி பயன்படுத்தி முன்னேறணும்னு விஜய் சார் காட்டிட்டார். அதோடு இவங்க ரெண்டு பேருமே இத்தனை உயரத்துக்கு வந்ததுக்கப்புறமும் நேர்ல சந்திச்சோம்னா எந்தவித பந்தாவும் இல்லாம ரொம்ப சாதாரணமா இருப்பாங்க. இதுனாலயே நான் இவங்களோடு ரசிகனா மாறிட்டேன். அதோடு எனக்கு இவங்க பெரிய ரோல் மாடலும் கூட. காக்கி சட்டை படத்துல அஜித் சார் டயலாக் மட்டுமில்ல... விஜய் சார் டயலாக்கும் இருக்கு!
சிவகார்த்திகேயன் உஷார் பார்ட்டிதான்!