ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
சாமி ரா ரா மற்றும் கார்த்திகேயா போன்ற படங்களில் மிகவும் வித்தியாசமாக நடித்து அனைவராலும் பாராட்டப்பட்டவர் நடிகர் நிகில். அவர் தற்போது மீண்டும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் படம் சூர்யா வெர்சஸ் சூர்யா ஆகும். இந்த படமும் தனக்கு புகழை பெற்று தரும் என்ற நம்பிக்கையில் அவர் இருக்கிறார். அந்த படத்தில் அவருக்கு சூரியனை கண்டால் அலர்ஜி ஏற்படும் ஒரு வித்தியாசமான நோயுடன் கூடிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இரவில் மட்டுமே அவரால் இயங்க முடியும் என்ற நிலையில் அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. அவருக்கு திரிதா சௌத்ரி ஜோடியாக நடிக்கிறார். சத்திய மகாவீர் இசை அமைக்கிறார். கார்த்திக் கட்டமனேனி இயக்குகிறார். இந்த படம் மார்ச் 5 ம் தேதி ரிலீஸ் ஆகிறது .