ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தான். இருப்பினும் அடுத்த சூப்பர்ஸ்டார் நடிகர் யார் என்கிற சண்டை கடந்த சில வருடங்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. அதில் விஜய், அஜீத் என்ற இரண்டு நடிகர்களின் பெயர்கள் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, விஜய் படங்களில் ஆடியோ விழாக்களில் சூப்பர்ஸ்டார் விஜய் என்றும், அஜீத் படங்களின் டைரக்டர்கள் சூப்பர்ஸ்டார் அஜீத் என்றும் மேடைகளில் கூறி வருகிறார்கள்.
இதற்கிடையே, சூப்பர்ஸ்டார் என்றால் அது என்றைக்குமே ரஜினி மட்டும்தான் என்றும் ஒரு குரல் கோடம்பாக்கத்தில் இன்னொரு பக்கம் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்த தருணத்தில், தற்போது அஜீத்தின் என்னை அறிந்தால் படம் தமிழ்நாடடைப்போலவே வெளிநாடுகளிலும் அதிகப்படியான தியேட்டர்களில் தற்போது திரையிடப்பட்டு .ஓடிக்கொண்டிருக்கிறது.
அநத வகையில், அமெரிக்கா, லண்டன், ஹாங்காங் போன்ற நாடுகளில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ஹாங்காங்கில் இதுவரை அஜீத் படங்களுக்கு இல்லாத வரவேற்பு கிடைத்துள்ளதாம். தியேட்டர்களை நோக்கி கூட்டம் படையெடுத்து வரும் நிலையில், சில ரசிகர்கள் அவருக்கு பட்டங்கள் சூட்டி பேனர்கள் வைத்துள்ளார்களாம்.
அதில் ஒரு சிறிய பெண், சூப்பர் ஸ்டார் அஜீத் என்று வைத்துள்ளாராம். அதோடு, சிற்நத நடிகரான அவருக்குத்தான் இந்த பட்டம் பொருத்தமானது என்று அங்குள்ள ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்களாம். ஹாங்காங் ரசிகர்களின் இந்த கருத்துக்கு விஜய் ரசிகர்கள் என்ன கருத்து சொல்லப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.