தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
கதையைப் பற்றி கவலைப்படாமல் காமெடியை நம்பி படம் எடுப்பவர் இயக்குநர் ராஜேஷ். இந்த ஃபார்முலாவில் இவர் இயக்கிய படங்களில் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய மூன்று படங்களும் வெற்றியடைந்தன. கார்த்தியை வைத்து அடுத்து இயக்கிய அழகுராஜா படம் தோல்வியடைந்தது. அழகுராஜா படத்தைத் தொடர்ந்து எம்.ராஜேஷ் தற்போது வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (சுருக்கமாக விஎஸ்ஓபி) என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார். இப்படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக முதல்முறையாக தமன்னா நடிக்கிறார்.
வழக்கம்போல் ஹீரோவின் நண்பனாக இப்படத்திலும் சந்தானமே நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தாமிரபரணி பானு நடிக்கிறார். வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திற்காக பாண்டிச்சேரியில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பாண்டிச்சேரி கடற்கரை சாலையில் சில தினங்களுக்கு முன் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அற்ப காரணங்களுக்காக காதலன்களை கழட்டிவிடும் காதலிகளை கண்டித்து உண்ணாவிரதம் ஆர்யாவும், சந்தானமும் இருக்கிறார்கள்.
வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் ஆர்யாவும், சந்தானமும் உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் கூல் ட்ரிங்ஸ் பாட்டில்கள், வாழைப்பழங்கள், டிபன் கேரியரில் சாப்பாடு என ஒரு பெரிய விருந்துக்குத் தேவையான சாப்பாடு அயிட்டத்தை வைத்துக் கொண்டு உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்த காட்சியைப் படமாக்கும்போது யூனிட் ஆட்களும் வேடிக்கைப் பார்த்த மக்களும் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். கண்டிப்பாக ரசிகர்களும் இந்த காட்சியை பார்த்து வயிறு குலுங்க சிரிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறது வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படக்குழு!