‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகர் நடிகைகள் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்து விட்டால், அதன்பிறகு அவர்கள் என்ன கேட்டாலும் கிடைக்கும். முக்கியமாக படப்பிடிப்பு தளங்களில் ஸ்டார் ஹோட்டல் உணவுகள்தான் அவர்களுக்கு கொடுக்கப்படும். அதேபோல், நினைத்த ஜூஸ் வகைகளை சாப்பிடலாம். அவர்கள் சொடக் போட்டாலே தேவையை நிறைவேற்ற உதவியாளர்கள் எந்நேரமும் தயார் நிலையில் இருப்பார்கள். ஆனபோதும், அவர்களால் விரும்பியதை சாப்பிடத்தான் முடியாது. உடம்பை கன்ட்ரோலில் வைத்திருக்க வேண்டும் என்று தங்களது விருப்ப உணவுகள் அனைத்தையுமே ஓரங்கட்டி விடுவார்கள். அந்த வகையில், அரை வயிறும் கால் வயிறுமாகத்தான் டயட்ஸ் கடைபிடிப்பார்கள். ஆனால் இந்த விசயத்தில் அஞ்சலி வித்தியாசமானவர். டைரக்டர்கள் எடையை குறைக்க சொன்னால் அந்த காலகட்டத்தில் மட்டுமே டயட்ஸ் மட்டுமின்றி கடின உடற்பயிற்சிகள் செய்து உடம்பை குறைப்பார். ஆனால், அவர்களது படத்தை முடித்ததும், தனது பேவரிட் அயிட்டங்களை புல் கட்டு கட்டத் தொடங்கி விடுவாராம். அதிலும் பிரியாணி என்றால் அவருக்கு கொள்ளை பிரியமாம். 3 மாதங்கள் அதை தவிர்த்தால் அடுத்து 3 மாதங்களுக்கு புகுந்து விளையாடி விடுவாராம்.