போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
2008-ல் குஷ்புவின் தம்பி அப்துல்லா நாயகனாக நடித்த படம் நேற்று போல் இன்று இல்லை. அப்படத்தில் ப்ரியா சகாதேவ் அவருக்கு ஜோடியாக நடிக்க வினிதா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருந்தார். அதோடு, டி.பி.கஜேந்திரன் ஆகியோரும் காமெடிக்காக கமிட்டாகியிருந்தனர். ஆனால் கெளசர் இயக்கத்தில் உருவாகயிருந்த அப்படம் சில நாள் படப்பிடிப்போடு நிறுத்தப்பட்டது. அதையடுத்து தம்பிக்காக சில தயாரிப்பாளர்களிடம் சிபாரிசு செய்தார் குஷ்பு. அப்போது, சிலர் வில்லன் வேடம் கொடுக்க முன்வந்தனர். ஆனால், அப்துல்லாவுக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதே கனவாக இருந்ததால் நெகட்டிவ் வேடங்களில் நடிக்க அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார் அப்துல்லா. இன்னும் டைட்டில் வைக்கப்படாத அப்படத்தில் இன்றைக்கு மார்க்கெட்டில் இருக்கும் சில கமர்சியல் நடிகர்களும் நடிக்கிறார்களாம். இப்படத்தில் அரும்பு மீசை குறும்பு பார்வை படத்தில் நாயகியாக நடித்த சாரிகா, அப்துல்லாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், இந்த தருணத்தை பயன்படுத்தி தம்பி அப்துல்லாவை சினிமாவில் ஆளாக்கி விட வேண்டும் என்று சில அபிமான டைரக்டர்களிடம் அவருக்கு ஆதரவு திரட்டி வருகிறாராம் குஷ்பு.