போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
முதன்முறையாக அஜீத்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ''என்னை அறிந்தால்''. அஜீத் ஜோடியாக அனுஷ்கா, த்ரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரீஸ் இசையமைத்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார். கிட்டத்தட்ட ஓராண்டாக உருவாகி வந்த இப்படம் இப்போது ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. பல்வேறு காரணங்களால் இரண்டு மூன்று முறை தள்ளிப்போன இப்படம் வருகிற பிப். 5ம் தேதி உறுதியாக ரிலீஸாக இருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இதில் படத்தை பார்த்த அதிகாரிகள் சில காட்சிகளை நீக்க சொன்னார்கள், ஆனால் படக்குழு மறுக்க, இறுதியில் யு/ஏ சான்று கொடுத்தனர். இதனையடுத்து படக்குழுவினர் ரி-வைசிங் கமிட்டிக்கு செல்ல இருந்தனர். ஆனால் இறுதியில் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை இப்போது படம் யு/ஏ சான்றோடு வௌியாக இருக்கிறது.
ஓராண்டு கழித்து என்னை அறிந்தால் படம் வௌியாக இருப்பதால் அதை வரவேற்க இப்போதே தயாராகிவிட்டனர் அஜீத்தின் ரசிகர்கள்.