‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சரோஜா, கோவா, ஈசன், மங்காத்தா என பல படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வந்தவர் வைபவ். இதில் மங்காத்தாவில் அஜீத்தையே அடிப்பது போன்ற காட்சியில் நடித்ததால் அஜீத் ரசிகர்களின் எதிர்ப்புக்கு ஆளானார். ஆனால் அஜீத் மேல் இவர் கைபட்ட நேரம் டமால் டுமீல் படத்தில் ஹீரோவாகி விட்டார் வைபவ். அதையடுத்து அவர் நடித்த கப்பல் மற்றும் ஆம்பள படங்களும் வெற்றி பெற்றதால் இப்போது சில படங்களில் ஹீரோவாகவே நடித்து வருகிறார். ஆனால், ஏற்கனவே தனது தாய்மொழியான தெலுங்கிலும் நடித்து வரும் வைபவிற்கு அங்கு ஒரு மார்க்கெட் உள்ளதாம். நயன்தாராவுடன் நடித்த அனாமிகா படம்தான் அவருக்கு அங்கு நல்லதொரு என்ட்ரியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாம்.
அதனால்,. இப்போது தான் தமிழில் நடிக்கும் படங்களுக்கு அவர் சம்பளம் கேட்பதில்லையாம். மாறாக, படத்தின் தெலுங்கு ரைட்ஸை எனக்கு கொடுத்து விடுங்கள் என்கிறாராம். விஜய், சூர்யா உள்ளிட்ட சில நடிகர்கள் தங்களது சம்பளத்துக்கு பதிலாக, சென்னை, செங்கல்பட்டு ஏரியா ரைட்ஸை வாங்கி வரும் நிலையில, வைபவ் ஆந்திராவின் மொத்த ரைட்ஸையே கேட்பதால் அதற்கு உடன்படாமல் பின்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.