‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பதினைந்து வருடங்களுக்கு முன்புவரை ஓஹோவென ஹீரோயினாக கொடிகட்டி பறந்தவர் தான் மலையாள நடிகை மஞ்சு வாரியர்.. ஜனப்ரிய நாயகன் திலீப்பை காதலித்து திருமணம் செய்துகொண்டபின் சினிமாவை விட்டு ஒதுங்கியவருக்கு, மீண்டும் சினிமா ஆசை தலைதூக்க, அதுவே அவரது திருமண வாழ்க்கையில் புயலை வீசவும் வைத்துவிட்டது. அவர் மீண்டும் நடிக்க வந்ததாலேயே அவருக்கும் திலீப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து வரை போய்விட்டது.
ஆனாலும் கடந்த வருடம் 'ஹவ் ஓல்டு ஆர் யூ' என்கிற படத்தில் கதையின் நாயகியாக, பதினைந்து வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்தார். இது மஞ்சுவுக்கு வெற்றிகரமான ரீ-என்ட்ரியாக அமைந்ததுடன், பலபக்கம் இருந்து பாராட்டுக்களையும் வாரிக்குவித்தது. தற்போது பத்து வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க விரும்பிய ஜோதிகாவும் இந்தப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் கதைநாயகியாக நடித்திருக்கிறார்.
'ஹவ் ஓல்டு ஆர் யூ' படத்தை பார்த்துவிட்டு அதன் மற்றமொழி ரீமேக் ரைட்சையும் சூர்யாவே வாங்கிவைத்துள்ளார். அந்தப்படத்தில் மஞ்சுவின் நடிப்பை பார்த்து வியந்த சூர்யா, தமிழில் தான் நடிக்கும் ஒரு படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கும்படி அழைப்பு விடுத்திருக்கிறார். மஞ்சுவும் அதற்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம். அனேகமாக சூர்யாவும், ஏ.ஆர்.முருகதாசும் மீண்டும் இணையும் புதிய படத்தில் மஞ்சு வாரியர் நடிக்கலாம் என தெரிகிறது.