ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலை, உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தேர்தல் அதிகாரியாகவும், பார்வையாளராகவும் இருந்து தேர்தலை நடத்தினார்.
தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள உறுப்பினர்கள் 967 பேர். இவர்களில் 50 சதவிகிதத்தினர் வெளியூர்களில் இருந்தனர். அவர்கள் நேற்று இரவே சென்னை வந்து தங்கி தங்களது ஓட்டுகளை செலுத்தினர்.