‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
உளவுத்துறை, ஜனனம் படங்களை இயக்கிய ரமேஷ் செல்வன் வஜ்ரம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பசங்க படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி குட்டிமணி நடிக்கிறார்கள். இவர்களுடன் மயில்சாமி, தம்பி ராமையா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஹீரோயினாக பவானிசிங் நடிக்கிறார். தெலுங்கில் வெளிவந்த தி என்ட் என்ற திகில் படத்தில் அறிமுகமான பவானி சிங். அந்த படத்தில் பேயாக நடித்திருந்தார். இதில் பள்ளி மாணவியாக நடித்துள்ளார். ஏழை சிறுவர்களுக்காக பள்ளிக்கூடம் நடத்துகிறார் தம்பி ராமையா. அவர் பள்ளிக்கூடத்தை வில்லன்கள் இடித்து அழித்துவிட பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் 4 பேர் சேர்ந்து வில்லன்களை பழிவாங்கி பள்ளியை எப்படி மீட்கிறார்கள் என்கிற கதை. கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிற கதை" என்கிறார் ரமேஷ் செல்வன்.