அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் |
சற்குணம் இயக்கத்தில் விமல் நடித்த படம் களவாணி. இந்த படத்தில் விமலின் தங்கையாக நடித்தவர் மனீஷா. இவர் தற்போது பதினெட்டு வயது குமரியாகி விட்டார். அதனால் தங்கை வேடங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு, அழகான நாட்கள், கொட்டாம்பட்டி தொடக்கப்பள்ளி, கலைந்த கனவுகள், ரயில் நகர் என பல படங்களில் ஹீரோயினாக கமிட்டாகி நடித்து வருகிறார்.
அவரிடத்தில், எந்த மாதிரியான நடிகையாக நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்டால், நான் தமிழ்நாட்டு பெண். அதனால் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பதிலேயே அதிக ஆர்வமாக உள்ளேன் முக்கியமாக யதார்த்தம் மீறாமல் இயல்பாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடிக்கவே விரும்புகிறேன். அதனால் அதற்கேற்ற கதைகளாக செலக்ட் பண்ணி நடித்து வருகிறேன் என்று கூறும் மனீஷா, இப்போது கல்லூரியில முதலாமாண்டு படித்துக்கொண்டிருக்கிறார். என்னதான் சினிமாவில் பிசியான நடிகையான போதும் படிப்பை விடும் ஐடியா இல்லை. காரணம், ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதனால், படிப்பு-நடிப்பு இரண்டையும் எனது இரு கண்களாக கொண்டு செயல்பட்டு வருகிறேன் என்கிறார்.
மேலும், நான் சின்ன வயதில் இருந்தே விஜய் சாரின் தீவிரமான ரசிகை. அவர் படங்களை ஒன்று விடாமல் பார்த்து விடுவேன். அதனால் எதிர்காலத்தில் அவருடன் டூயட் பாட வேண்டும் என்பதுதான் எனது சினிமா கனவே. இப்போதைக்கு சின்ன படங்களில் நடித்தாலும், இந்த படங்களில் எனது நடிப்பு பேசப்படுபோது விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
இப்படி சொல்லும் மனீஷாவிடத்தில், முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் கிளாமர் கதவுகளை திறக்க வேண்டியதிருக்குமே? என்று கேட்டால், கிளாமராக நடிப்பதில் எந்த ஆட்சேபனையும இல்லை. அவரது படங்களில் தமன்னா, சமந்தா போன்ற நடிகைகள் மாதிரி நடிப்பேன். அதேசமயம், லிமிட் தாண்டமாட்டேன். அனைவரும் குடும்பத்துடன் அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில் அழகிய கிளாமரை வெளிப்படுத்துவேன் என்கிறார் மனீஷா.