‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தனது ஹீரோ மார்க்கெட் ஓய்ந்ததை அடுத்து கேரக்டர் ஆர்ட்டிஸ்டான நவரச நாயகன் கார்த்திக், மாஞ்சாவேலு, புலிவேசம், ராவணன் போன்ற படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்தார். அதையடுத்து இப்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அனேகன் படத்தில் இதுவரை தான் நடித்திராத ஒரு புதுமையான ரோலில் நடித்திருக்கிறார். அந்த படத்தின் ஆடியோ விழாவின்போது, தன்னை மாறுபட்ட கோணத்தில் பார்த்தற்காக கே.வி.ஆனந்துக்கு நன்றி சொன்ன கார்த்திக், இனிமேல் இநத மாதிரியான வேடங்களில்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்க மாட்டேன். கதைக்கு அந்த கேரக்டர் தான் திருப்புமுனை தரக்கூடியது என்றால் ஒரு சீன் என்றாலும் நடிப்பேன என்றார். கார்த்திக்கின் இந்த ஸ்டேட்மென்டிற்கு பிறகு கோலிவுட் டைரக்டர்களின் கவனம் அவர் பக்கம் திரும்பியுள்ளது.