‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தான் காதலித்து மணந்த லண்டனைச் சேர்ந்த பாடகி கஜாயாவை திருமணம் செய்து கொண்டு 2 வருடங்களில் விவாகரத்து செய்தார். அதன் பிறகு ஷில்பா மோகன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவரையும் பிரிந்தார். இப்போது மூன்றாவது முறையாக ஜெபருன்னிஷா என்ற முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு யுவன் இஸ்லாம் மதத்தை தழுவினார். தனது பெயரை அப்துல் மாலிக் என்று மாற்றிக் கொண்டார். யுவனின் இந்த மாற்றங்கள் இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை, அதனால் அவர் திருமணத்திற்கும் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் துபாய் செல்கிறார்கள். அரபு நாடுகளில் தங்கள் தேனிலவை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். விரைவில் தேனிலவுக்காக மணமக்கள் துபாய் பறக்க இருக்கிறார்கள்.