தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
கமல்ஹாசன், ஒரு படத்தை முடித்து விட்டுத் தான், அடுத்த படத்தில் நடிப்பார். நீண்ட நாட்களாகவே இந்த நடைமுறையை பின்பற்றி வருகிறார். ஆனால், சமீபகாலமாக, இந்த நடைமுறையை மாற்றியுள்ளார். இதன் காரணமாக, அவர் நடித்துள்ள, 'உத்தம வில்லன், விஸ்வரூபம் - 2, பாபநாசம்' ஆகிய படங்கள், அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளன. இதனால், கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில் அடுத்த தகவல் வெளியாகியுள்ளது. 'வாம மார்க்கம்' என்ற தலைப்பில், அவர் நடிக்கவுள்ள அடுத்த படம் தயாராக போகிறதாம். கமல் ரசிகர்களுக்கு, செமத்தியான விருந்து காத்திருக்கிறது.