ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
விஜயசேதுபதி நடிக்கவிருந்த படம் வசந்தகுமாரன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிந்துமாதவி கமிட்டாகியிருந்தார். தற்போது கைவசம் சில படங்கள் இருந்தபோதும் அவை அனைத்துமே மார்க்கெட் இல்லாத ஹீரோக்களின் படங்கள் என்பதால், விஜயசேதுபதியுடன் ஜோடி சேரப்போகும் இந்த படம் வீழ்ந்து கிடக்கும் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தும் என்று ரொம்பவே நம்பியிருநதார் பிந்துமாதவி.
ஆனால், அப்படத்தின் பாடல் கம்போஸிங் வேலைகள் முடிந்து படப்பிடிப்புக்கு செல்லும் நேரத்தில், அப்படத்தை தயாரிக்க இருந்த ஸ்டுடியோ 9 சுரேஷ்க்கும், விஜயசேதுபதிக்குமிடையே கருத்து மோதல் ஏற்பட்டது. அதனால், அந்த படத்திற்கு வாங்கிய அட்வான்சை கொடுத்து விட்டு விலகிக்கொள்கிறேன் என்று அறிவித்தார் விஜயசேதுபதி.
இந்த செய்திகேட்டு ஆடிப்போனார் பிந்துமாதவி. இந்த ஒரு படம் என்னை காப்பாற்றி விடும் என்று நம்பியிருந்தேனே, இப்படி பிரச்சினையில் சிக்கி விட்டதே என்று புலம்பிக்கொண்டு திரிந்தவர். இந்த படத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து படப்பிடிப்பு தொடங்க வேணடும் என்று வேண்டாத தெய்வங்களையெல்லாம் வேண்டிக்கொண்டிருந்தார்.