தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் |
பட்டாளம், எப்படி மனசுக்குள் வந்தாய், சுண்டாட்டம் உள்பட சில படங்களில் நடித்தவர் இர்பான். சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி ஆகிய தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது பொங்கி எழு மனோகரா, ரு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் பொங்கி எழு மனோகரா படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் இர்பான்.
இதுபற்றி அவர் கூறுகையில், இதற்கு முன்பு நான் நடித்த படங்களிலும் நான் அதிக எதிர்பார்ப்புடன்தான் நடித்தேன். ஆனால் அந்த படங்கள் சரியான விளம்பரம் இல்லாததால் எதிர்பார்த்தபடி மக்களை சென்றடையவில்லை. ஆனால் இந்த பொங்கி எழு மனோகரா படத்தை பொறுத்தவரை நல்ல பப்ளிசிட்டி செய்கிறார்கள்.
அதோடு, இந்த படமும் இப்போதைய ரசிகர்கள் விரும்பும்படியான கதையில் உருவாகியிருப்பதால் கண்டிப்பாக எனக்கு இது முதல் வெற்றி படமாக அமையும் என்று உறுதியாக நம்புகிறேன். மேலும், இப்படத்தில் சிங்கம்புலி எனது நண்பனாக காமெடி வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் காமெடிக்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். அதனால் கதை மட்டுமின்றி காமெடியும் ரசிகர்களை கவரும் என்று சொல்லும் இர்பான், இந்த படத்திற்கு பிறகு ஜனரஞ்சகமான ஹீரோவாகி விடுவேன் என்கிறார்.
இப்படி இர்பான் அதிகமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பொங்கி எழு மனோகரா படம், டிசம்பர் மாதமே வெளியிட திட்டமிடப்பட்டிருநதது. ஆனால், ரஜினியின் லிங்கா டிசம்பர் 12ந்தேதி வருவது உறுதியானதோடு, அடுத்து பொங்கலுக்கு அஜீத்தின் என்னை அறிந்தால், ஷங்கரின் ஐ படமும் வெளியாக இருப்பதால், அந்த பிரமாண்ட படங்களுக்கு நடுவே இப்படம் சிக்கினால் காணாமல் போய்விடும் என்பதால்., இப்போது ரிலீஸ் தேதியை ஜனவரி மாதம் 30ந்தேதிக்கு மாற்றி வைத்துள்ளனர்.