செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாதர் பாலிவுட் நடிகை பாயல் கோஷ். பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். நடிகை ரிச்சா சத்தாவையும், அனுராக் காஷ்யப் பலாத்காரம் செய்தார் என்று கூற பாயல் கோஷுக்கு எதிராக 1 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் ரிச்சா. அதன்பின்னர் ரிச்சா சத்தாவிடம், பாயல் மன்னிப்புக் கேட்க அந்த வழக்கு முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார். அவர் திருமணம் செய்து கொள்வார் என்று நம்பி அவரது ஆசைக்கு இணங்கியதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பதிவுகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.