‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகைகளில் விஜயசாந்திதான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர். அந்த அளவுக்கு ஆக்சன் கதைகளில் நடித்ததோடு, நடிகர்களுக்கு இணையாக ரஃப் அண்ட் டஃப் கதைகளிலும் துணிந்து நடித்தார். ஆனால், அவருக்குப்பிறகு எத்தனையோ ஆக்சன் நடிகைகள் வந்தபோதும் அவரது இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை.
அவர் நடித்த வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தின் ரீமேக்கான பவானி ஐபிஎஸ் படத்தில் சினேகா நடித்தார். ஆனால் அவரது நடிப்பு எடுபடவில்லை. அதனால் பின்னர் விஜயசாந்தி நடித படங்களின் ரீமேக்கில் நடிக்க எந்த நடிகைகளும் துணியவில்லை.
இந்த நிலையில், அனாமிகா படத்தில் நடித்த பிறகு நயன்தாராவை ஆக்சன் ஹீரோயினியாக்கும் முயற்சியில் சில டைரக்டர்கள் முன்வந்துள்ளனர். அதில் டைரக்டர் ஜெயம் ராஜா தனது தம்பி ஜெயம்ரவியை வைத்து இயக்கி வரும் தனி ஒருவன் படத்தில் நயன்தாரா ஆக்சன் ஹீரோயினியாக்கியிருக்கிறார். படத்தில் அவருக்கு சண்டை காட்சியும் உளளதாம்.
அதைப்பார்த்து, தற்போது நயன்தாராவை லேடி சூப்பர் ஸடார் என்று கூறியுள்ளார் உதயநிதி. அவருடன் இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா எனற் இரண்டு படங்களில் நடித்தபோதும் அவர் ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை என்பதை தெரிந்து கொண்டேன் என்று தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார் உதயநிதி. இந்த சேதி வெளியானதை அடுத்து, நயன்தாராவுக்கு நெருக்கமான சில நடிகர்கள் எஸ்எம்எஸ் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்களாம்.