ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
சிறுத்தை சிவா இயக்கததில், அஜீத் நடித்த படம் வீரம். இந்த படத்தில் தமன்னாவின் குடும்பத்தில் 5 வயது யுவீனா என்ற குழந்தை நட்சத்திரம் நடித்திருந்தார். அப்போது, அஜீத்துடன் சில காட்சிகளிலும் யுவீனா நடித்திருந்தார். அதோடு பாடல் காட்சிகளிலும் நடனமாடியதால் யுவீனா, கோலிவுட் இயக்குனர்களின் கவனத்துக்கு வந்து விட்டார்.
அதனால், ஜெய்ஹிந்த்-2 படத்துக்கு ஒரு குழந்தை நட்சத்திரம தேவைப்பட்டபோது, வீரம் படத்தைப்பார்த்த அர்ஜூன், இந்த சிறுமியையே நடிக்க வைக்கலாம் என்று கமிட் பண்ணினார். அப்படத்தில் அர்ஜூனின் மகளாக அற்புதமாக நடித்திருந்தார் யுவீனா. அதையடுத்து அவரது நடிப்பு பற்றி சினிமா வட்டாரத்தில் இன்னும் நல்ல டாக் ஏறபட்டதை அடுத்து, மேலும் சில படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக கமிட்டாகியிருக்கிறார் யுவீனா.
அதில், வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் மாஸ் படமும் ஒன்று. ஜெய்ஹிந்த்-2 படத்தைப்போலவே இந்த படத்திலும் சூர்யாவின் மகளாக நடிக்கிறாராம் யுவீனா. முந்தைய படங்களை விட இந்த படத்தில் அவருக்கு நிறைய காட்சிகள் உள்ளதாம். முக்கியமாக சுவிட்சர்லாந்தில் தற்போது மைனஸ் 3 டிகிரி சீதோஷ்னத்தில் நடந்து வரும் மாஸ் படப்பிடிப்பில் சூர்யாவுடன் நயன்தாரா நடிக்கும் காட்சிகள் உள்பட மகளாக யுவீனா நடிக்கும் காட்சிகளும் படமாகிக்கொண்டிருக்கிறதாம்.