ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
ரஜினியின் லிங்கா படத்திற்கு யு சான்று கிடைத்துள்ளது. இதனால் ஏற்கனவே அறிவித்தபடி ரஜினி பிறந்தநாளில் படம் ரிலீசாவது உறுதியாகிவிட்டது. கோச்சடையான் படத்திற்கு பிறகு ரஜினி, நடித்து வெளிவர இருக்கும் படம் லிங்கா. ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ளார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார், ரஜினியின் நண்பர் ராக்லைன் வெங்கடேஷ் பிரமாண்டமாக படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட லிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் டீஸர், பாடல்கள், டிரைலர் என அனைத்துமே ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று ஒரு பக்கம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான லிங்கா பட ஆல்பத்தில் ரஹ்மான் பாடிய ஓ நண்பனே... என்ற பாடல், இனோ பாடிய மோனா கேசோலினா... என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்ல லிங்கா ஆல்பம் ஐ டியூன்ஸிலும் டாப் 10 லிஸ்ட்டில் இடம்பிடித்திருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை சென்சாருக்கு அனுப்பியிருந்தனர். பொதுவாக ரஜினி படத்தைப் பொறுத்தவரை ஏ சர்டிஃபிகேட் வழங்கும் அளவுக்கு வன்முறையோ..ஆபாசமோ இருக்காது, பெரும்பாலும் யு சர்டிஃபிகேட்தான் கிடைக்கும். ஆனாலும், லிங்கா படத்தில் சென்சிடிவ்வான முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையை கையிலெடுத்திருப்பதால் சென்சாரில் ஏதாவது பிரச்சனை வருமோ டென்ஷனில் இருந்தனர் படக்குழுவினர். ஆனால் தணிக்கை குழுவினரோ படத்திற்கு ஒரு கட் கூட கொடுக்காமல் யு சான்று கொடுத்துள்ளனர். இதனால் லிங்கா படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த மகிழ்ச்சியுடனேயே ஏற்கனவே அறிவித்த படி ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி லிங்கா படத்தை உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய முழு மூச்சாக களமிறங்கியுள்ளனர் லிங்கா படக்குழுவினர்.