ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
சரத்குமார் இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் சண்டமாருதம். ஓவியா, மீரா நந்தன் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள் ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார். ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். ஹீரோ சரத்குமாருக்கு ஜோடியா நடிக்கும் ஓவியா பாங்காங்கில் சரத்குமாருடன் படு கவர்ச்சியாக ஆட்டம்போட்டு திரும்பியிருக்கிறார்.
சீனியர் ஹீரோவுடன் அவர் போட்டிருக்கும் கவர்ச்சியாட்டம்தான் கோலிவுட்டின் ஹாட்டான டாபிக். ஆனால் இதைப்பற்றி ஓவியாவிடம் கேட்டால்..."என்னோட கேரக்டர் அப்படி. படத்தில் நான் போலீஸ் அதிகாரி. சில உண்மைகளை சரத்குமாரிடம் இருந்து வரவழைக்க அவரை காதலிப்பது போல் நடித்து அவருக்கு நெருக்கமாக இருந்து அந்த உண்மைகளை பெற வேண்டும். அப்படி ஒரு சூழ்நிலையில் வருவதுதான் அந்த பாடல் காட்சி. அப்படியொன்றும் கவர்ச்சியாக அதில் நடிக்கவில்லை. டாப்பில் இருக்கும் நடிகைகளை விடவா நான் கவர்ச்சியாக நடித்திருக்கிறேன்?" என்று திருப்பிக் கேட்கிறார்.
சண்டமாருதத்தின் 70 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. பின்னி மில்லில் கண்ணாடி ஷெட்போட்டு கடந்த சில நாட்களாக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். இதில் பாங்காக்கை சேர்ந்த 50 சண்டை கலைஞர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 200 கலைஞர்களும் பங்கேற்று நடித்து வருகிறார்கள். டிசம்பர் மாதம் பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது. பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.