‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பைட்டராக இருந்தவர், பாலாவின், நான் கடவுள் படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டவர் ராஜேந்திரன். தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன. சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்துள்ள விலாசம் படத்தில், காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றிருந்தார். இது பலராலும் ரசிக்கப்பட்டது.
இதுப்பற்றி அவர் கூறுகையில், விலாசம், திருடன் போலீஸ் போன்ற சமீபத்திய படங்கள் எனக்கு நல்ல பெயரை கொடுத்திருக்கிறது. வில்லன், காமெடி இரண்டுமே எனக்கு நன்றாக வருகிறது. ஆனால், ரசிகர்கள் காமெடி கலந்த வில்லன் ரோலை தான் ரசிக்கிறாங்க. நண்பேன்டா, முனி 3, காலகட்டம், தண்ணியில கண்டம், 49 ஓ போன்ற படங்களில் நல்ல நல்ல ரோல் பண்ணியிருக்கேன். காலக்கட்டம் என்ற படத்தில் உமா என்ற பெண்ணோடு அழகிய விழிகளில் 60... என்ற பாக்யராஜ் பாடலில் ஒரு சின்ன பாட்டு எனக்கும் இருக்கு. வாலிப ராஜா படத்தில் சந்தானத்தோடு சேர்ந்து காமெடி பண்ணுவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அந்தந்த கதைக்கு ஏற்ற மாதிரி இயக்குநர்கள் என்னை பயன்படுத்தி கொள்கின்றனர். ரசிகர்கள் விரும்புகிற மாதிரி கண்டிப்பாக படங்கள் பண்ணுவேன் என்கிறார் ராஜேந்திரன்.