சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் |
அஜீத்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லன் குரூப்புடன் வருவதற்கு ஒரு உயரமான நடிகர் வேண்டுமென்று சில மாதங்களாக தேடுதல் வேட்டை நடத்தி வந்திருக்கிறார்கள். அப்போதுதான் ஆத்மா என்ற வில்லன் நடிகரின் போட்டோ கெளதம்மேனனின் பார்வைககு சென்றிருக்கிறது. அதையடுத்து அவர் யார்? என்னென்ன படங்களில் நடித்துள்ளார் என்று விசாரித்தபோது, ஆர்யா நடித்துள்ள மீகாமன் படத்தில் 7 வில்லன்களில் இந்த ஆத்மாவும் ஒரு வில்லன் என்பது தெரிய வந்திருக்கிறது.
அதனால் உடனே அவரை அழைத்து என்னை அறிந்தால் படத்துக்கு புக் பண்ணியிருக்கிறார் கெளதம்மேனன். அதையடுத்து அப்படத்துக்காக 12 நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டாராம் ஆத்மா.
அந்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், அஜீத் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது பெரிய ஆசைகளில் ஒன்று. அதனால் என்னை அறிந்தால் படத்துக்கு செலக்ட் ஆனதும் பெரிய மகிழ்ச்சியடைந்தேன். ஆனபோதும் அஜீத் பெரிய நடிகர் என்பதால் ஒருவித பயம் இருந்தது. ஆனால், அவரை சந்தித்தபோது ரொம்ப கேசுவலாக என் தோளில் கை போட்டு பேசினார். அவரது யதார்த்தமான பேச்சு எனக்கு அவர் மீதிருந்த பயத்தை போக்கியது. அதுமட்டுமின்றி, தினமும் ஸ்பாட்டுக்கு வந்ததும் என்னை அழைதது பேசிக்கொண்டிருப்பார்.
அவருடன் நடித்தபோது, நானும் நன்றாக நடிக்க வேண்டும் என்பதற்காக டிப்ஸ் கொடுத்தார். இப்படி அவருடன் யார் நடித்தாலும் அவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்பதில் அஜீத் ரொம்ப கவனமாக இருந்தார். அவர் பழகுவதையும், மற்றவர்களும் நன்றாக நடிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டுவதையும் பார்த்தபோது ஈகோ என்பது துளியும் இல்லாத ஒரு சிறந்த நடிகர் அஜீத் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
அதேபோல் கெளதம்மேனனும், என்னிடம் அழகாக வேலை வாங்கினார். ஒவ்வொரு காட்சியையும் நடித்துக்காட்டி என்னை நடிக்க வைத்தார். அதனால்தான் என்னால் சிறப்பாக நடிக்க முடிந்தது. அதனால மீகாமன், என்னை அறிந்தால் படங்கள் திரைக்கு வரும்போது கோலிவுட்டில் நானும் பேசப்படும் நடிகராகி விடுவேன் என்கிறார் வில்லன் ஆத்மா.