‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான கே.பாக்யராஜ் நடிக்கும் படங்களில் எல்லாம் அது கொஞ்சம் தூக்கலாக இருக்கும். இலை மறை காயாக, இரட்டை அர்த்த வசனங்களாக இருக்கும். முந்தானை முடிச்சு படத்தில் "நான் ஆளான தாமரை..." ரொமான்ஸ் பாடலை இப்போதும் மறக்க முடியாது. அவரது படங்களில் ஒரு ரொமான்ஸ் பாடலாவது கட்டாயம் இருக்கும். கடைசியாக அவர் 1998ம் ஆண்டு வெளிவந்த வேட்டிய மடிச்சுக்கட்டு படத்தில் ரொமான்ஸ் பண்ணியிருந்தார்.
இப்போது 16 வருடங்களுக்கு பிறகு தான் நடித்து வரும் துணை முதல்வர் என்ற படத்தில் ஸ்வேதா மேனனுடன் ரொமான்ஸ் பாடலில் நடித்திருக்கிறார். இதற்காக அண்மையில் இருவரும் நெருக்கமாக ஆடிப்பாடும் பாடல் காட்சிகளில் நடித்தனர்.
இந்தப் படத்தில் பாக்யராஜுடன் ஜெயராம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காதல் சந்தியா நடிக்கிறார். கவுதம், கோஸ்ரீ என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். பிரதீப் இசை அமைக்கிறார். கார்த்திக்ராஜா ஒளிப்பதிவு செய்கிறார் கே.பாக்யராஜின் கதை, திரைக்கதையை ஆர்.விவேகானந்த் இயக்குகிறார். இது அரசியல் காமெடி படம். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. டிசம்பரில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.