‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
'வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் பென்சில்' படங்களில் பள்ளி மாணவியாக சீருடை அணிந்து நடித்துள்ள ஸ்ரீதிவ்யா, விஷ்ணுவுடன் நடித்த, 'ஜீவா' படத்தில், கல்லுாரி மாணவியாக நடித்தார். ஆனால் இதையடுத்து, அவரை குடும்ப பொறுப்பை சுமக்கும் முக்கியமான வேடங்களில் நடிக்க, சிலர் தொடர்பு கொண்ட போது, தடாலடியாக மறுத்து விட்டார். காரணம் கேட்டால், 'இப்போது, நான் டீன்ஏஜ் பெண். என் வயதுக்கு பொருந்தக்கூடிய கதாபாத்திரங்களில் நடித்தால் தான், பொருத்தமாக இருக்கும். இப்போதைய ரசிகர்கள், என் போன்ற இளம் நடிகைகளை கலர்புல்லாக பார்க்கத்தான் ஆசைப்படுகின்றனர். அழுது வடியும் வேடங்களை வெறுக்கின்றனர். அதனால் தான், என் வயதுக்கேற்ற இளமையான கேரக்டர்களில் மட்டுமே நடிக்கிறேன்' என்கிறார்.